பெலகாவி : ”அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள், எவ்வளவு செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என துணை முதல்வர் சிவகுமார், சட்டசபையில் நேற்று எச்சரிக்கை விடுத்தார்.
கேள்வி நேரத்தின் போது, சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:
பா.ஜ., – முனிரத்னா: ஆர்.ஆர்.நகர் சட்டசபை தொகுதியின், 73வது வார்டில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு அதிகமாகி உள்ளது. ஏரி, பூங்கா, குடிநீர் வடிகால் வாரியம் உட்பட அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கரமிப்பு செய்துள்ளனர்.
பிரமோத் லே – அவுட்டில், 2 ஏக்கர் நிலம் ஆக்கிரமித்து, அங்கிருந்த உபகரணங்கள் இரவோடு, இரவாக அகற்றப்பட்டுள்ளன. விசாரணைக்கு சென்ற போலீசார், செல்வாக்கு மிக்கவர்களின் பெயர்களை கூறுகின்றனர்.
ஆக்கிரமிப்பு செய்தவர்கள், எவ்வளவு செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துணை முதல்வர் சிவகுமார்: கர்நாடகாவில் ஆட்சி செய்த அனைத்து அரசுகளும், அவர்கள் கால கட்டத்தில் ஆக்கிரமிப்பை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். தற்போதும் அந்த பணியை தொடர்ந்து செய்து வருகின்றோம்.
பி.டி.ஏ., பெங்களூரு மாநகராட்சி உட்பட அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள், எவ்வளவு செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆக்கிரமிப்பாளர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். யாரையும் பாதுகாக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை.
இவ்வாறு விவாதம் நடந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement