
தென்னிந்தியாவில் கூகுள் டாப் 10 நடிகர்கள் பட்டியலில் விஜய், ரஜினி, தனுஷ்
2023ம் ஆண்டின் இறுதி மாதம் இப்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கூகுள் நிறுவனம் தென்னிந்திய அளவில் அதிகளவில் தேடப்பட்ட டாப் 10 நடிகர்களின் பட்டியலைக் வெளியிட்டுள்ளது. அதன்படி, முதல் இடத்தை நடிகர் விஜய் பிடித்துள்ளார். இதைத்தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஜந்தாம் இடத்தில் நடிகர் தனுஷ், ஏழாம் இடத்தில் நடிகர் சூர்யா, பத்தாம் இடத்தில் நடிகர் அஜித் குமார் என ஐந்து நடிகர்கள் இந்த டாப் 10 பட்டியலில் இடம் பிடித்துள்ளனர் என அறிவித்துள்ளனர்.
டாப் 10 நடிகர்கள் பட்டியல்
01. விஜய்
02. ரஜினிகாந்த்
03. அல்லு அர்ஜூன்
04. பிரபாஸ்
05. தனுஷ்
06. மகேஷ்பாபு
07. சூர்யா
08. ராம் சரண் தேஜா
09. சிரஞ்சீவி
10. அஜித் குமார்