
அனிமல் 2வில் மாளவிகா மோகனன்?
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்வீர் கபூர் நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் 'அனிமல்'. இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இப்படம் உலகளவில் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்த படத்திலேயே இரண்டாம் பாகத்திற்கான க்ளூவை கொடுத்திருந்தனர்.
இந்த நிலையில் அனிமல் 2ம் பாகத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது .மேலும், இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை மாளவிகா மோகனன் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் தொடங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாளவிகா மோகனன் தமிழில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து தெலுங்கில் பிரபாஸ் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.