சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச.14) கிராமுக்கு 120 ரூபாய் அதிகரித்து ரூபாய் 5820-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 120 ரூபாய் அதிகரித்து ரூபாய் 5820.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 960 அதிகரித்து ரூபாய் 46560.00 என விற்பனையாகி வருகிறது. கடந்த சில நாட்களாக சற்று குறைந்து வந்த தங்கத்தின் விலை, இன்று மீண்டும் ஏறுமுகமாகியுள்ளதால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சி நடத்துபவர்கள் கவலை அடைந்து இருக்கின்றனர்.
வெள்ளி விலையை பொறுத்தவரை சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 2 ரூபாய் 70 காசுகள் அதிகரித்து ரூ.79.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.79,500 க்கு விற்பனையாகிறது.