வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காஞ்சிபுரம் : காஞ்சி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விஜய யாத்திரையில், தெலுங்கானாவின் நிஜாமாபாத் சென்றடைந்தார்.
காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், வட மாநிலங்களுக்கு விஜய யாத்திரை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து தெலுங்கானா மாநிலத்திற்கு புறப்பட்டு, நிஜாமாபாத் சென்றார். சுவாமிகளுக்கு, பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அங்கு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
பாசாரா நகரில் உள்ள ஞான சரஸ்வதி கோயிலில் சுவாமிகள் சிறப்பு பூஜைகள் செய்தார்.
பின்னர் உத்தரா திருப்பதியில் உள்ள ஸ்வாகதா சபாவில் சிறப்புரை ஆற்றுகிறார். தொடர்ந்து தரிசிக்க வந்த பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இந்த விஜய யாத்திரையை தொடர்ந்து, செகந்தராபாத் சென்று அங்குள்ள சங்கர மடத்தில் தங்குகிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement