புதுடில்லி: கடந்த ஐந்து ஆண்டுகளில்1,765 ரயில் லோகோ பைலட்டுகள் மூச்சு பரிசோதனையில் தோல்வி அடைந்துள்ளனர் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 8,28,03,387 மூச்சு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அதிகபட்சமாக 1,761 லோகோ பைலட்டுகள் மூச்சு பரிசோதனையில் தோல்வி அடைந்துள்ளனர். இதில் 674 பயணிகள் லோகோ பைலட்டுகள் மற்றும் 1087 சரக்கு லோகோ பைலட்டுகள் சோதனையில் தோல்வியடைந்துள்ளனர்.
மேலும் அவர் கூறி இருப்பதாவது: பணி நேரத்தில் மது அருந்துவதைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கையாக ப்ரீதலைசர் சோதனைகளை ரயில்வே வழக்கமாக மேற்கொள்கிறது. சோதனையில் தோல்வியுறும் லோகோ பைலட்டுகள் ரயிலை இயக்க அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. என்றார்.
பரிசோதனையில் அதிகபட்சமாக வடக்கு ரயில்வேயில் இருந்து 521 பேர் தோல்விஅடைந்துள்ளனர். குறைந்த பட்சமாக தெற்கு ரயில்வேயில் 12 பேர் மட்டுமே தோல்வி அடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement