மதுரை திண்டுக்கல் அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரி வழக்கை சிபிஐக்கு மாற்ற மதுரை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரி திண்டுக்கல்லில் அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த 1 ஆம் தேதி இரவு 10 மணிக்கு நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு, திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். அன்கித் திவாரி தற்போது, நீதிமன்ற உத்தரவின்படி லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினரின் காவலில் உள்ளார். அமலாக்கத்துறை அதிகாரி கைதுசெய்யப்பட்ட வழக்கை சிபிஐ -க்கு மாற்றக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. […]
