சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமியின் இன்றைய எபிசோடும் ரசிகர்களுக்கு பிடித்தமானதாகவே அமைந்துள்ளது. இந்த சீரியலில் அடுத்தடுத்த ட்விஸ்ட்கள் இருந்தபோதிலும் கடந்த வாரத்தில் முதலிடத்தை பிடித்த இந்தத் தொடர் மீண்டும் இரண்டாவது இடத்தில் பின்தங்கியுள்ளது. தற்போது கேன்டீன் கான்டிராக்டை சிறப்பாக நடத்திவரும் பாக்கியா, அதுகுறித்து சந்தோஷப்படாதவகையில் எழில், செழியன் விவகாரம் அவருக்கு மனஉளைச்சலை கொடுத்து வருகிறது.
