ம்துரை: மதுரையில் மெக்கானிக்கல் பொறியாளர் ஒருவர் அவரது நண்பர்களுடன் இணைந்து விலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க ‘பஞ்சுர்லி’ என்னும் சூரிய மின் சக்தி மூலம் இயங்கக்கூடிய நவீன இயந்திரத்தை வடிவமைத்துள்ளனர்.
புயல், மழை போன்ற இயற்கை சீற்றங்கள் மட்டுமின்றி, பறவைகள், விலங்குகள் கூட விவசாயத்துக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. இயற்கை சீற்றங்கள், விலங்குகளை மீறி விவசாயிகள் பயிர்களை விளைவித்து அறுவடை செய்து சந்தைக்கு கொண்டுவது, ஒரு குழந்தையை பெற்றெடுக்கும் தாயின் பிரசவ வலிக்கு சமமானதாக பார்க்கப்படுகிறது.
பெரும்பாலும் புயல், மழை சேதங்களுக்கு மட்டும் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடும் இழப்பீடும், அரசு வழங்கும் நிவாரணமும் கிடைக்கிறது. விலங்குகள், பறவைகளால் ஏற்படும் சேதத்துக்கு இழப்பீடுகள் கிடைப்பதில்லை. ஆனால், இயற்கை சீற்றங்களை போலே, பன்றிகள், யானைகள், ஆடுகள், மாடுகள், பறவைகளால் ஏற்படும் சேதமும் விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துகின்றன.
கடந்த காலத்தைப் போல் இல்லாமல் தற்போது விவசாயமும் மற்ற துறைகளை போல் நவீனமயமாகி வருகிறது. விதை விதைப்பது, களையெடுப்பது, நாற்று நடுவது, அறுவடை செய்வதற்கு ட்ரோன், ரோபாட்டிக் இயந்திரம், இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. கூலியாட்கள் பற்றாக்குறை மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தில் இந்த நவீன இயந்திரங்கள் ஒரளவு விவசாயிகளின் பிரச்சனைகளை குறைத்தாலும், விலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க ஒரு தீர்வு கிடைக்காதா? என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
அவர்களது கவலையை போக்கும் வகையில் மதுரையில் மெக்கானிக்கல் இன்ஜினிரிங் படித்த மதுரை தெற்கு வாசல் ஜெகதீஸ்வரன் மற்றும் அவரது நண்பர்கள், ‘பஞ்சுர்லி’ என்னும் சூரிய மின் சக்தி மூலம் இயங்கக்கூடிய நவீன இயந்திரத்தை வடிவமைத்துள்ளனர். பறவைகள், விலங்குகளிடம இருந்து பயிர்களை காப்பாற்றி விவாயத்துக்கு இந்த நவீன இயந்திரம் உதவுகிறது.
எளிமையான வடிவமைப்பு, மின்சாரம் தேவையில்லை, 5 ஏக்கர் வரை பயிர்களை பாதுகாக்கலாம். அனைத்து காலநிலைகளிலும் இயங்கக்கூடியது போன்ற வசதிகளுடன் குறைந்த விலையில் இந்த நவீன இயந்திரத்தை வடிவமைத்துள்ளனர். தற்போது பரிசோதனை முறையில் கொடைக்கானல், மதுரை மாவட்டத்தில் மலையோர விவசாய நிலங்களை இந்த இயந்திரத்தை கொண்டு பாதுகாக்க தொடங்கி, அதில் பறவைகள், விலங்குகள் சேதத்தில் இருந்து காப்பாற்றி வெற்றிகரமாக அறுவடை செய்ய விவசாயிகளுக்கு உதவியுள்ளனர். கடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், தங்கள் இந்த புதிய இயந்திரத்தை அவர்கள் காட்சிப்படுத்தினர்.
இதுகுறித்து ஜெகதீஷ்வரன் கூறுகையில், ‘‘இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு சாப்ட்வேர் பயிற்சி, பாடத்திட்டத்துக்கான ‘ப்ராஜக்ட்’ பயிற்சிகள் வழங்கி வந்தோம். தற்போது 3 ஆண்டுகளாக விவசாயத்தில் நவீன இயந்திரங்களை உருவாக்க கவனம் செலுத்தி வருகிறோம். கடந்த காலத்தில் விவசாயம் செய்வதற்கு சிறு வயது முதலே அதற்கு பேரணுபவம் இருக்க வேண்டும், கடினமாக உழைக்க வேண்டும் போன்ற அடிப்படை தகுதிகள் இருந்தது.
தற்போது மண் வளத்தை பரிசோதனை செய்வது, நோய் தாக்குதலை கண்டறிவது, அதனை முன்கூட்டியே விவசாயிகளுக்கு தெரிவிப்பது, என்னென்ன சத்துகள் கொடுக்கலாம், எப்போது அறுவடை செய்யலாம் போன்றவற்றை வழிகாட்டுவதற்கு தற்போது போதிய பல்வேறு தரவுகளுடன் நவீன தொழில்நுடப் வசதிகள் அறிமுகப்டுத்தப்பட்டுள்ளன. யார் வேண்டுமென்றாலும் விவசாயம் செய்யலாம் என்ற காலம் வந்துள்ளது. எனவே, படித்த இளைஞர்கள் தற்போது விவசாயம் பக்கம் திரும்பி, அதில் வெற்றிகரமாக செயல்பட்டு முன்னோடி விவசாயிகளாக மாறியுள்ளனர்.
அந்த அடிப்படையிலே தற்போது நாங்கள் பறவைகள், விலங்குகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற இந்த ‘கிட்’ தயார் செய்துள்ளோம். 5 ஏக்கர் நிலம் வரை இந்த இயந்திரம் சுற்றிப்பாதுகாக்கும். எங்கள் கண்டுபிடிப்பிற்கு ‘பேட்டன்’ பெற விண்ணப்பித்துள்ளாம். தற்போது கேட்கிற விவசாயிகளுக்கு நாங்கள் இந்த இயந்திரத்தை விவசாய நிலத்தில் வைத்து வருகிறோம். மானியம் மூலம், இயந்திரங்களை விவசாயிகளுக்கு வழங்க அரசு துறை அதிகாரிகளுடன் பேசி வருகிறோம்.

பொதுவாக மலையில் இருந்து இறங்கும் யானைகள், பன்றிகளே விவசாயத்தை அதிகம் சேதப்படுத்துகின்றன. அதனை விரட்டுவதற்கு விவசாயிகள், நெருப்பு பற்ற வைப்பது, கை களை தட்டுவது, சத்தம்போதுவது, வெடி போடுவது, மைக் மூலம் இரைச்சல் வரழைப்பது போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். அவை தற்போது விலங்குகளுக்கு பழக்கமாகிவிட்டது. அதனை மீறி தற்போது விலங்குகள்பயிர்களை சேதப்படுத்துகின்றன. அவற்றை நாங்கள் நேரடியாக கள ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளாம். தற்போது நாங்கள் கண்டுபிடித்துள்ள இயந்திரம், 24 மணி நேரமும் செயல்படக்கூடியது.
சூரிய வெளச்சம் கிடைத்தால் போதுமானது. மின்சாரம் தேவையில்லை. 2 முதல் 3 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒலி எழுப்புவதோடு 800 மீட்டர் வரை இரவில் ‘டார்ச் லைட்’ போல் அடிக்கும். தொடர்சியாக ஒலி எழுப்பாமல் வெளிச்சத்துடன் இடைவெளிவிட்டு ஒலி எழுப்புவதால் விலங்குகள் பீதியடைந்து திரும்பி சென்றுவிடுகிறது. விவசாயிகள் விலங்களிடம் இருந்து காப்பாற்ற மின் வேலி அமைக்கக்கூடாது. அதற்கு இந்த நவீன இயந்திரம் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும், ’’ என்றார்.