சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா சூர்யாவை திருமணம் செய்துக் கொண்ட பின்னர் திருமண வாழ்க்கையில் மூழ்கிய நிலையில், நடிப்புக்கு பெரிய பிரேக் போட்டார். ஜோதிகாவை நடிக்கக் கூடாது என சிவகுமார் தான் சொன்னார் என்றும் ஜோதிகாவும் சூர்யாவும் மும்பைக்கு குடியேறவும் அவர் தான் காரணம் என்றும் ஏகப்பட்ட வதந்திகள் வெளியாகின.
