வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாட்னா:பீஹாரில் நேற்று நடந்த போலீஸ் எஸ்.ஐ., தேர்வில், மோசடிகளை தடுக்க, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
பீஹாரில், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் – ராஷ்ட்ரீய ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, 1,275 போலீஸ் எஸ்.ஐ., பணியிடங்களை நிரப்ப, நேற்று மாநிலம் முழுதும் இரு கட்டங்களாக முதல்நிலைத் தேர்வு நடந்தது.
பீஹார் காவல் துறை துணை சேவைகள் கமிஷன் நடத்திய இந்த தேர்வில், 6.60 லட்சம் தேர்வர்கள் பங்கேற்று தேர்வை எழுதினர்.
இத்தேர்வில், ஆள்மாற்றம், திருட்டு போன்ற மோசடிகளை தடுக்க, ஏ.ஐ., தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
இதன்படி, 613 தேர்வு மையங்களில் தேர்வெழுத வந்த தேர்வர்களின் முகம், கண் கருவிழி உள்ளிட்டவை சோதனை செய்யப்பட்டன.
தேர்வு மையங்களின் நுழைவாயில்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தும், பீஹார் காவல் துறை துணை சேவைகள் கமிஷன் தலைமையகத்தின் கட்டுப்பாட்டு அறையில் இணைக்கப்பட்டிருந்தன.
தேர்வில் முறைகேட்டில் ஈடுபடும் நபருக்கு, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தேர்வெழுத தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement