
ரெய்டு தெலுங்கு ரீமேக் டைட்டில் ‛மிஸ்டர் பச்சான்'
கடந்த 2018ல் ராஜ்குமார் குப்தா இயக்கத்தில் அஜய் தேவகன், இலியானா நடித்து ஹிந்தியில் வெளியாகி வெற்றியடைந்த திரைப்படம் 'ரெய்டு'. இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ரவி தேஜா, பாக்யா ஸ்ரீ போர்ஸ் நடிக்கின்றனர். பீபுல் மீடியா பேக்டரி தயாரிக்கும் இந்த படத்தை ஹரிஷ் சங்கர் இயக்குகிறார். இந்த நிலையில் இந்த படத்திற்கு ‛மிஸ்டர் பச்சான்' என தலைப்பு வைத்துள்ளதாக இன்று பர்ஸ்ட் லுக் உடன் அறிவித்துள்ளனர்.