பல்சரை போட்டுத்தாக்க வரும் டிவிஎஸ் பைக்… புத்தாண்டு தள்ளுடியுடன் – மைலேஜ் முதல் EMI வரை இதோ!

Automobile News: ஸ்மார்ட்போன்கள், கணினி, ஸ்மார்ட் டிவி, லேப்டாப்கள் உள்ளிட்ட பல மின்னணு சாதனங்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தள்ளுபடியில் வழங்கப்படுகின்றன. அதேபோல், பைக் மற்றும் கார் போன்ற ஆட்டோமொபைல்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. புத்தாண்டு நெருங்கி வரும் சூழலில், பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்கள் பைக்குகளுக்கு எக்ஸ்சேஞ் தள்ளுபடிகள், போனஸ், ஆப்பர்கள் உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்கின்றன.

மேலும், இப்போதெல்லாம் பைக்குகளை நீங்கள் குறைந்த மாதத் தவணைகளிலேயே பெற்றும் கொள்ளலாம்.
சிறந்த மைலேஜ் மற்றும் அழகிய வடிவமைப்புடன் கூடிய செலவு குறைந்த பைக்கை வாங்க வேண்டும் என நினைத்தால் இந்த தகவல் உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கலாம். 

டிவிஎஸ் நிறுவனம் அதன் பைக்குகளில் கணிசமான தள்ளுபடிகள் மற்றும் குறைந்த மாதத் தவணை திட்டங்களை வழங்கி வருகின்றன. மிகவும் மலிவான மாதத் தவணை திட்டத்துடன் ஒரு பைக்கை சொந்தமாக்குவதற்கான பொன்னான வாய்ப்பை நீங்கள் பெறுகின்றனர். TVS Raider 125 மாதத் தவணை திட்டம் குறித்து கூடுதல் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

TVS Raider 125, கவர்ச்சிகரமான வடிவமைப்பைக் கொண்ட பட்ஜெட்டுக்கு ஏற்ற பைக், சென்னையில் ரூ.86,771 (Ex. Showroom) – ரூ.1.1 லட்சம் (On Road)  விலையில் கிடைக்கிறது. இந்த டிவிஎஸ் நிறுவனத்தின் சலுகையானது இந்திய சந்தையில் ஒரு வேரியண்ட் மற்றும் 10 வண்ண ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

இந்த பைக்கின் மாதத் தவணை திட்டத்தை ஆராய்ந்தால், இந்தியாவில் அதன் ஆன்ரோடு விலை ரூ.1.1 லட்சமாக உள்ளது. குறைந்த மாதத் தவணை திட்டத்துடன், ரூ.9 ஆயிரம் முன்பணம் செலுத்தி பைக்கை வாங்கலாம். 36 மாத தவணைத் திட்டத்தைத் தேர்வுசெய்யலாம். ஒவ்வொரு மாதமும், 9.7% வங்கி வட்டியுடன், ரூ.3,162 தவணை செலுத்த வேண்டும். மொத்த வங்கிக் கடன் தொகை ரூ.98,408 வரை வரும். உங்கள் நகரம் மற்றும் டீலர்ஷிப் அடிப்படையில் இந்த மாதத் தவணை திட்டங்கள் மாறுபடலாம், எனவே துல்லியமான விவரங்களுக்கு உங்கள் அருகில் உள்ள டிவிஎஸ் டீலரைத் தொடர்புகொள்வது நல்லது.

இந்த பைக் ஒரு வலுவான 124.8 cc ஒற்றை சிலிண்டர், ஏர்-கூல்டு, மூன்று-வால்வு எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. 7,500 rpm மற்றும் 11.2bhp மற்றும் 6,000 rpm, 11.2Nm உச்ச முறுக்குவிசையை உருவாக்குகிறது. இந்த பைக் ஐந்து ஸ்பீடு கியர்பாக்ஸைக் கொண்டுள்ளது. அதிகபட்சமாக 99 கி.மீ., வேகத்தை எட்டும். 10 லிட்டர் எரிபொருள் டேங்குடன் 56.7 கிமீ மைலேஜை வழங்குகிறது.

TVS Raider 125 ஆனது ஸ்பீடோமீட்டர், ட்ரிப் மீட்டர், டேகோமீட்டர், கியர் பொசிஷன், ஓடோமீட்டர், இன்ஜின் கேஜ், சர்வீஸ் இண்டிகேட்டர் மற்றும் 5-இன்ச் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உட்பட சிறப்பம்சங்களுடன் வருகிறது. பாதுகாப்பு அம்சங்களாக ஸ்மார்ட்போன் மற்றும் புளூடூத் இணைப்பு, குரல் உதவி வழிசெலுத்தல் அமைப்பு, TVS SmartXConnect அமைப்பு, இன்கம்மிங் காலிங் மற்றும் நோட்டிபிக்கேஷன் மற்றும் மொபைல் சார்ஜிங் ஸ்டால் ஆகியவற்றை உள்ளடக்கியது.

சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் அம்சத்துடன், இந்த புதிய பைக்கின் முன்பக்கத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன் மற்றும் ப்ரீலோட்-அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பின்புற மோனோ-ஷாக் சஸ்பென்ஷன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அடிப்படை வேரியண்டில் இரண்டு சக்கரங்களிலும் டிரம் பிரேக்குகளுடன் பொருத்தப்பட்டுள்ளது. உயர் வேரியண்ட் 240 மிமீ முன் டிஸ்க் பிரேக் மற்றும் 130 மிமீ பின்புற டிரம் பிரேக்கை வழங்குகிறது. இந்திய சந்தையில், இந்த பைக் Bajaj Pulsar 125 மற்றும் Honda SP 125 போன்ற மாடல்களுடன் போட்டியிடுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.