வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பீஜிங்: சீனாவின் கான்சு மாகாணத்தில் இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 100க்கும் அதிகமானோர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் கான்சு மகாணத்தில் உள்ள லின்சியா சென்குவான்சென் என்ற இடத்தில் பூமிக்கு 10 கி.மீ., ஆழத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவான இந்நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டடங்கள் சரிந்தன.
இதனால் 100க்கும் அதிகமானோர் கட்டட இடிபாடுகளில் சிக்கி உயரிழந்தனர். 100க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இடிபாடுகளில் பலர் சிக்கியிருப்பதால் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement