
'சலார்' ரிலீஸ் டிரைலர் : ஆக்ஷனில் மிரட்டுகிறதா ?
பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்க பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சலார்' படம் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கான டிரைலர் ஏற்கெனவே வெளியான நிலையில் நேற்று ரிலீஸ் டிரைலர் என மற்றுமொரு டிரைலரை வெளியிட்டனர்.
அந்த டிரைலர் ஹிந்தியில் 26 மில்லியன், தெலுங்கில் 16 மில்லியன், தமிழில் 4.7 மில்லியன், மலையாளத்தில் 4.1 மில்லியன், கன்னடத்தில் 3.9 மில்லியன் பார்வைகளை இதுவரை பெற்று மொத்தமாக 50 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
நேற்று வெளியான ரிலீஸ் டிரைலருக்கு, விமர்சன ரீதியாகவும், பார்வைகள் ரீதியாகவும் இதற்கு முன்பு வெளியான டிரைலரை விடவும் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. புதிய டிரைலர் ஆக்ஷனில் மிரட்டும் டிரைலராக இருப்பதால் இப்படிப்பட்ட வரவேற்பைப் பெற்றுள்ளது.
இருப்பினும் இதிலும் 'கேஜிஎப்' படத்தின் சாயல் நிறைய இருப்பதாக ரசிகரக்ள் கமெண்ட் செய்துள்ளனர்.