
2024 பார்லி., தேர்தலில் கங்கனா போட்டி
பாலிவுட்டின் பிரபல நடிகை கங்கனா ரணாவத். தமிழிலும் தாம் தூம், தலைவி, சந்திரமுகி 2 படங்களில் நடித்துள்ளார். பா.ஜ., அபிமானியான இவர் தொடர்ந்து பாரத பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். விரைவில் இவர் தேர்தலில் போட்டியிடலாம் என தகவல்கள் வந்த நிலையில் தற்போது வரும் பார்லிமென்ட் தேர்தலில் போட்டிட போகிறாராம்.
இதுபற்றி கங்கனாவின் தந்தை அமர்தீப் கூறுகையில், ‛‛பா.ஜ., சார்பில் கங்கனா பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிடுகிறார். தொகுதி இன்னும் முடிவாகவில்லை. அதை பா.ஜ.வின் தலைமை தான் முடிவு செய்யும்'' என்றார்.