நொய்டா:“நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் வசிப்போர் மற்றும் வீட்டில் அல்லது சமுதாயக் கூடத்தில் விருந்து நடத்த, மது வாங்கிக் கொள்ள உரிமத்துக்கு விண்ணப்பிக்கலாம்,” என, உத்தர பிரதேச மாநிலம் கவுதம் புத்தா நகர் மாவட்ட கலால் துறை அதிகாரி சுபோத் குமார் ஸ்ரீவஸ்தவா கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
வீட்டில் அல்லது சமூக கூடத்தில் அனுமதி இன்றி மது விருந்து நடத்துவது சட்டவிரோதம். அது அபராதத்துக்கு உரிய குற்றம். கலால் துறை தொடர்பான விதிமுறைகள் குறித்து குடியிருப்போர் நலச் சங்கங்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கலால் துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்லது. இதுபோன்ற விருந்துகள் நடத்த முறையாக விண்ணப்பித்து கட்டணம் செலுத்தி உரிமம் பெற்றுக் கொள்ளலாம். உத்தர பிரதேசத்திலோ அல்லது வெளிமாநில மதுபானமாக இருந்தாலும், உரிமம் பெற்று விருந்து நடத்த வேண்டும்.
வீடுகளில் மது விருந்து நடத்த உரிமத்துக்கு 4,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். சமூக கூடங்களில் நடத்த 11,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த உரிமம் ஒரு நாள் மட்டுமே செல்லுபடியாகும்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் நவம்பர் 30 வரை 5,820 பேர் மது விருந்து உரிமம் பெற்றுள்ளனர். அதுவே, இந்த நிதியாண்டில் இதுவரை 8,770 உரிமங்கள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement