சென்னை: சென்னையில் மறு கட்டுமான திட்டத்தில் புதிதாக 8,723 குடியிருப்புகள் கட்டப்படுகின்றன என்ற அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள், திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்த ஆய்வு கூட்டத்தில் பேசிய அமைச்சர், மறுகட்டுமான திட்டத்தின்கீழ் மயிலாப்பூர் வன்னியபுரம், ஆண்டிமான்ய தோட்டம், பருவாநகர், நாட்டான்தோட்டம், ஆயிரம் விளக்கு தொகுதியில் டாக்டர் தாமஸ் ரோடு பகுதி – 1 மற்றும் […]
