வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மாஸ்கோ: ரஷ்யா அதிபர் தேர்தலில் புடினுக்கு எதிராக தாக்கல் செய்த பெண் ஊடகவியலாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. ரஷ்ய உச்ச நீதிமன்றத்தில் முறையிட போவதாக பெண் ஊடகவியலாளர் எகாத்ரினா தெரிவித்துள்ளார்
ரஷ்யாவில் தற்போது அதிபராக உள்ள புடினின் பதவி காலம் 2024ம் ஆண்டு மே மாதம் நிறைவடைகிறது. அதிபர் தேர்தல் 2024ம் ஆண்டு மார்ச் 17ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் தேர்தலில் போட்டியிட புடின் மனுத்தாக்கல் செய்தார். இதற்கான ஆவணங்களை புடின் சார்பில் ரஷ்ய தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
புடினை எதிர்த்து தேர்தலில் போட்டியிட பெண் ஊடகவியலாளர் எகாத்ரினா தன்சோவா என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால், ரஷ்ய தேர்தல் கமிஷன் அவரது மனுவில் நூற்றுக்கும் மேற்பட்ட தவறுகள் உள்ளதாக கூறி மனுவை நிராகரித்தது. இந்த முடிவை எதிர்த்து ரஷ்ய உச்ச நீதிமன்றத்தில் முறையிட போவதாக எகாத்ரினா தெரிவித்துள்ளார்.
ரஷ்யா- உக்ரைன் இடையே நடந்து வரும் போருக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர்களில் பெண் ஊடகவியலாளர் எகாத்ரினா தன்சோவா ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement