Samsung Health App: ஒவ்வொருவரும் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது மிகவும் அவசியமானதாகும். அவ்வாறு செய்யாவிட்டால் விரைவில் நோய்வாய்ப்பட்டு உடல் பலவீனமாகிவிடும். குளிர்காலம், மழை காலம் உள்ளிட்ட பல நேரங்களில் நீங்கள் நோய்வாய்ப்பட்டால், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நீங்கள் மாத்திரை, மருந்துகளை உட்கொள்ள வேண்டும். அப்போதுதான் உங்கள் உடல் ஆரோக்கியத்தை சீராக்க முடியும் எனலாம்.
ஸ்மார்போனே உதவும்
நீங்கள் சரியான நேரத்தில் மருந்துகளை எடுத்துக் கொள்ளவில்லை என்றால், நோய் மற்றும் உங்களின் உடல்நிலை குணமடைய நேரம் எடுக்கும். இதில் பெரும்பாலானோருக்கு எதில் பெரிய பிரச்சனை வரும் என்றால், அவர்கள் சரியான நேரத்தில் மருந்துகளை சாப்பிட மறந்துவிடுவதுதான்.
இதனால் அவர்கள் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இந்த சிக்கலை தீர்க்க, இப்போது உங்கள் ஸ்மார்போனே உங்களுக்கு உதவும். இதுதொடர்பாக ஸ்மார்ட்போனில் ஒரு புதிய அம்சம் வந்துள்ளது. இந்த அம்சம் உங்கள் மருந்தை உட்கொள்ள வேண்டிய நேரத்தை உங்களுக்கு நினைவூட்டும்.
ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அசத்தல் அம்சம்
இப்போது, ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு, ஒரு நிறுவனம் இந்த அம்சத்தை கொண்டு வருகிறது, இது உங்கள் அனைத்து மாத்திரை, மருந்துகளையும் கண்காணிக்க உதவுகிறது எனலாம். அவற்றை எப்போது நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் உங்களுக்கு நினைவூட்டுகிறது. சாம்சங் ஹெல்த் செயலி (Samsung Health App) மூலம் புதிய அம்சம் வருகிறது. இதில் நீங்கள் எடுக்கும் மருந்துகளின் வகைகள், அவற்றை எப்போது எடுக்க வேண்டும், உங்களுக்கு வழங்கப்படும் மாத்திரைகளின் அளவு மற்றும் அவற்றின் நிறம் ஆகியவற்றைக் கூட கைமுறையாகக் குறிப்பிடலாம்.
சாம்சங்கின் புதிய வசதி
சாம்சங் நிறுவனம் தனது ஹெல்த் செயலியில் புதிய அம்சத்தை தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் வெளியிட உள்ளது. இது இந்த மாதத்தின் பிற்பகுதியில் அப்டேட்டை பெறும். புதிய அப்டேட் தற்போது அமெரிக்காவில் மட்டும் வருகிறது. இந்த அம்சம் தங்களிடம் உள்ள மாத்திரை, மருந்துகளின் இருப்பு தீர்ந்துவிட்டதாக நினைவூட்ட தேவைப்படுபவர்களுக்கும் உதவியாக இருக்கும்.
எச்சரிக்கையும் வரும்
இந்த அம்சம் நீங்கள் உட்கொள்ளும் மருந்துகளைப் பற்றியும் கூறுகிறது. இந்த அம்சம் உங்களுக்கு ஏதேனும் பக்கவிளைவுகள் உள்ளதா என்பதையும் உங்களுக்குத் தெரிவிக்கிறது மற்றும் உங்களுக்கு வழங்கப்பட்ட மாத்திரைகளில் ஏதேனும் சரியாக இல்லை என்றால் உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும். சாம்சங் மருத்துவப் பொருட்களைச் சுற்றி வேலை செய்யும் எல்சேவியர் என்ற நிறுவனத்திடம் இருந்து நிபுணர்களின் உதவியைப் பெற்றுள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்.
எனவே, ஆண்ட்ராய்டில் இந்த மருந்து அம்சத்தைப் பயன்படுத்த ஒருவர் செய்ய வேண்டியவை குறித்து இதில் காணலாம். ஆண்ட்ராய்டு 8.0 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு கொண்ட ஸ்மார்ட்போன் உங்களிடம் இருக்க வேண்டும். புதுப்பிக்கப்பட்ட சாம்சங் ஹெல்த் செயலி பதிப்பு 6.26 இல்லை அதற்கு பிறகான வெர்ஷனை பயன்படுத்த வேண்டும் என்று சாம்சங் கூறுகிறது. கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று என்னவென்றால், நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனை பொறுத்து ஹெல்த் பயன்பாட்டின் மருந்து அம்சம் மாறுபடலாம்.