வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
செஞ்சுரியன்: செஞ்சுரியன் டெஸ்டில் துாணாக நின்ற ராகுல் சதம் விளாசினார். இந்திய அணி 245 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் ஆல்அவுட்டானது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், ‘பாக்சிங் டே’ போட்டியாக நேற்று (டிச.,26) செஞ்சுரியனில் துவங்கியது. துவக்கத்தில் இருந்து தடுமாறிய இந்திய அணியில் ஸ்ரேயாஸ் (31), கோலி (38) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 8 விக்., இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. லோகேஷ் ராகுல் (70), முகமது சிராஜ் (0) அவுட் ஆகாமல் இருந்தனர். தெ.ஆப்ரிக்க வீரர் ரபாடா 5 விக்., வீழ்த்தினார்.
இன்று 2ம் நாள் ஆட்டம் துவங்கியது. சிராஜ் 5 ரன்னில் வெளியேறினார். கோயட்சீ பந்தில் சிக்சர் அடித்த ராகுல், டெஸ்டில் 8வது சதத்தை கடந்து அசத்தினார். 101 ரன்கள் சேர்த்தபோது பர்கர் பந்தில் போல்டானார் ராகுல். இதனால் இந்திய அணி 245 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணியின் மார்க்ரம் 5 ரன்னில் சிராஜ் பந்தில் அவுட்டானார். 13 ஓவர்கள் முடிவில் தெ.ஆப்ரிக்கா அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் எடுத்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement