ஆக்ரா: உ.பி. அருகே பனி மூட்டம் காரணமாக விபத்தில் சிக்கிய லாரியில் இருந்த கோழிகளை அப்பகுதி வாசிகள் அள்ளிச்சென்ற சம்பவம் நடந்தது.
கடும் பனிமூட்டம் காரணமாக உத்தர பிரதேசம் ஆக்ராவின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.இந்த விபத்தில் கறி கோழிகளை ஏற்றி வந்த லாரி ஒன்றும் விபத்தில் சிக்கியது.
அடர்ந்த பனி காரணமாக சாலை தெரியாததால் சாலையோர தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளான லாரியின் கூண்டுகளில் வைக்கப்பட்டிருந்த கோழிகள் சாலையில் சரிந்து விழுந்தன.
அப்போது அவ்வழியாக பயணித்த வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள், கறி கோழிகளை அள்ளிச் சென்றனர். ஒரு சிலர் சாக்கு மூட்டைகளில் அவற்றை எடுத்துச் சென்றனர். கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் இரு சக்கர வாகனங்களிலும் வந்து கோழிகளை எடுத்துச் சென்றனர்.
விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தும் பணி நடந்த சூழலின் நடுவே, கறிக் கோழிகளை பொதுமக்கள் ஆர்வமுடன் எடுத்துச் சென்ற, ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வேகமாக பரவின.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement