upcoming Tata Cars – 2024ல் வரவிருக்கும் டாடா எஸ்யூவி மற்றும் கார்கள்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன பிரிவில் 2024 ஆம் ஆண்டு எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பஞ்ச்.EV, கர்வ்.EV, ஹாரியர்.EV, மற்றும் பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் ஆகியவை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

இரண்டாமிடத்தில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்துடன் கடுமையான சவாலினை ஏற்படுத்தி வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலக்ட்ரிக் வாகன சந்தையில் முதன்மையாக உள்ளது.

Tata Punch.EV

டாடா பஞ்ச் காரின் அடிப்படையில் வரவுள்ள பஞ்ச்.EV எஸ்யூவி காரில் ALFA பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட உள்ள முதல் மாடலான பஞ்ச் எலக்ட்ரிக் காரில் அனேகமாக 24 kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டு அதிகபட்சமாக 315Km/charge மற்றும் 19.2 kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டு அதிகபட்சமாக 250Km/charge ஆக இரண்டு ஆப்ஷனை பெறக்கூடும். ஆனால் எந்தவொரு பேட்டரி பேக் ஆப்ஷனையும் தற்பொழுது வரை டாடா மோட்டார்ஸ் உறுதிப்படுத்தவில்லை.

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் டாடா பஞ்ச்.இவி காரின் விலை ரூ.10 லட்சத்துக்குள் துவங்கலாம்.

punch ev

Tata Harrier.EV

விற்பனையில் உள்ள டாடா ஹாரியர் ICE அடிப்படையிலான டிசைன் அம்சங்களை பெற்றதாக வரவிருக்கின்ற ஹாரியர்.EV காரில் 60-80Kwh லித்தியம் ஐயன் பேட்டரி பெற்று முழுமையான சிங்கிள் சார்ஜில் 500-550 கிமீ வரையிலான ரேஞ்ச் வழங்கும் வகையில் வரவிருக்கின்றது. புதுப்பிக்கபட்ட டிசைன் அமைப்புடன் 5 நட்சத்திர மதிப்பீடு பெற்ற உறுதியான கட்டுமானத்தை பெற்று Level 2 ADAS பாதுகாப்பு அம்சத்தை பெற உள்ளது.

2024 ஆம் ஆண்டு இறுதியில் எதிர்பார்க்கப்படுகின்ற டாடா ஹாரியர்.இவி விலை ரூ.25 லட்சத்தில் வெளியிட வாய்ப்புள்ளது.

tata harrier.ev

Tata Azura.EV

கூபே  வடிவ தோற்றத்தை பெற்றதாக டாடா கர்வ்.EV கான்செப்ட் அடிப்படையில் வரவுள்ள மாடலுக்கு அசூரா.இவி என்ற பெயரில் அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உள்ளது. இந்த மாடல் பெட்ரோல் மட்டுமல்லாமல் எலக்ட்ரிக் என இரண்டிலும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜிப்ட்ரான் நுட்பத்தை பெற உள்ள கர்வ் காரில் 500-600 கிமீ ரேஞ்ச் வழங்கும் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கலாம். ICE பிரிவில் 1.2 லிட்டர் TGDi என்ஜின் 123bhp மற்றும் 225Nm டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. டாப் வேரியண்டில் 167bhp மற்றும் 280Nm டார்க் வழங்குகின்ற 1.5 லிட்டர் TGDi இன்ஜினைப் பெறலாம். கூடுதலாக, டீசல் 1.5-லிட்டர் என்ஜின் பெற வாய்ப்புள்ளது.

முதற்கட்டமாக 2024 ஆம் ஆண்டு பண்டிகை காலத்துக்கு முன்பாக டாடா கர்வ்.இவி விற்பனைக்கு ரூ.18-ரூ.20 லட்சத்தில் வரக்கூடும். அடுத்து ICE வெர்ஷனில் 2024 ஆம் ஆண்டு இறுதி அல்லது 2025ல் வெளிவரலாம்.

tata azura ev

Tata Punch Facelift

பஞ்ச் மாடலின் எலக்ட்ரிக் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் புதிய டிசைனை பெறுவதுடன், இன்டிரியரில் கூடுதலான வசதிகளை பெற வாய்ப்புள்ளது. அடுத்தப்படியாக என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இருக்காது.

1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 3 சிலிண்டர் கொண்ட டாடா பஞ்ச் மாடல் அதிகபட்சமாக 86 hp பவர் மற்றும் 113 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலண்டில் வரவுள்ள டாடா பஞ்ச் விலை  ரூ. 6.10 லட்சத்தில் துவங்கலாம்.

punch icng

Tata Altroz Racer

120 hp பவரை வெளிப்படுத்துகின்ற என்ஜினை பெற உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ராஸ் ரேசர் பவர்ஃபுல்லான ஹேட்ச்பேக் மாடலாக விளங்கலாம். 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் விற்பனைக்கு ரூ.10 லட்சத்தில் துவங்கலாம்.

altroz racer

Follow us on Google News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.