கொரோனா தொற்றில் புதிய வகையான, ஜே.என்.1 தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 157 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. இதற்கு, ஓமைக்ரான் தொற்றின் புதிய உருமாற்றமான, ஜே.என். 1 வகை தொற்றே காரணம் என்று, கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜே.என்.1 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை, 157 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, கேரளாவில் 78; குஜராத் 34; கோவா 18; கர்நாடகா 8; தமிழகத்தில் நான்கு பேர், இவ்வகை தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஜே.என்.1 தொற்றால், கடந்த மாதத்தில் 16 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இம்மாதத்தில் இதுவரை மட்டும், 141 பேர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
இதையடுத்து, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படியும், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படியும், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், ‘ஜே.என். 1 வகை தொற்று வேகமாக பரவினாலும், அதனால் ஏற்படும் பாதிப்பு குறைவே’ என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement