கண்ணீரில் மிதக்கும் தீவுத்திடல் : விஜயகாந்த்திற்கு இறுதி அஞ்சலி

திரைத் துறையில் கால் பதித்து, பெரும்புகழ் ஈட்டி, தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்கு பின், தனிக்கட்சி துவங்கி, அரசியல் களத்தில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்த நடிகர் விஜயகாந்த், 71, சென்னையில் நேற்று காலமானார்.

தேடி வந்தவர்களின் பசியை போக்கி, ஏழை மக்களின் உள்ளங்களில் இடம்பிடித்தவரின் இறுதி சடங்கு, இன்று மாலை, அரசு முழு மரியாதையுடன் நடக்க உள்ளது.

முன்னதாக நேற்று மருத்துவமனையில் இருந்து விஜயகாந்த் வீட்டிற்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக., அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது

கோயம்பேட்டில் அரசியல், திரைப்பிரலங்கள் அஞ்சலி
புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன்,அதிமுக., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜய பாஸ்கர், ஏசி சண்முகம், சசிகலா, திக தலைவர் கீ.வீரமணி, அதிமுக., முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, வைகோ, திருமாவளவன், பாடலாசிரியர் வைரமுத்து, இயக்குனர்கள் எஸ்பி முத்துராமன், டி.ராஜேந்தர், ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர்கள் கவுண்டணி, மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ், விஜயகுமார், மாரி செல்வராஜ், கோவை சரளா, விக்னேஷ், லலிதா, அஜய் ரத்னம், கருணாஸ், ஷாம், கேஎஸ் ரவிக்குமார், அர்ஜூன், விமல், அபிராமி, நாசர், இளையராஜா, சத்யராஜ், கவுதமி, சவுந்தர்ராஜா, பிரேம், லோகேஷ் கனகராஜ், அமீர், ராமராஜன், விஜய், விஜய் ஆண்டனி உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகள்பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

கண்ணீரில் திளைத்த தீவுத்திடல்
தொடர்ந்து இன்று(டிச., 29) காலை 6 மணிக்கு சென்னை தீவுத்திடலுக்கு விஜயகாந்த் உடல் கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. காலை முதலே திரளான ரசிகர்கள், கட்சி தொண்டர்கள் சாரை சாரையாக வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக அமைச்சர்கள் உதியநிதி, தங்கம் தென்னரசு, சாமிநாதன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை, சிபி ராதா கிருஷ்ணனன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

திரையுலகை சேர்ந்த ரஜினி, கமல், ராம்கி, லிவிங்ஸ்டன், தேவா, ஸ்ரீகாந்த் தேவா, ஸ்ரீகாந்த், டெல்லி கணேஷ், அருள்நிதி, நந்தா, பாக்யராஜ், குஷ்பு, சுந்தர் சி, பார்த்திபன், வாகை சந்திரசேகர், ராதாரவி, ஏஎல் விஜய், சூப்பர் சுப்பராயன், சுதா கொங்கரா, மனோ, எம்எஸ் பாஸ்கர், சுரேஷ் கிருஷ்ணா, எடிட்டர் மோகன், அறந்தாங்கி நிஷா, நிரோஷா, சுரேஷ் காமாட்சி, சீமான், களஞ்சியம், நளினி, பாபி சிம்ஹா, சரவணன், ரமேஷ் கண்ணா, டி.சிவா, ஜெயப்பிரகாஷ், சிவா, சித்ரா லட்சுமணன், ரோகினி, சுகன்யா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.

ஸ்டன்ட் யூனியன் கலைஞர்கள் அஞ்சலி
விஜயகாந்த் என்றாலே ஆக்ஷன் மாஸாக இருக்கும். அவருக்கு அஞ்சலி செலுத்த தமிழ் சினிமா ஸ்டன்ட் யூனியனை சேர்ந்த கலைஞர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு வந்து விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.