வாஷிங்டன் புத்தாண்டு தினத்தில் உலக மக்கள் தொகை, 800 கோடியை தாண்டும் எனவும், நடப்பாண்டில் மட்டும் உலக மக்கள் தொகை, 7.5 கோடி அதிகரித்து உள்ளதாகவும், அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பின் அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது:
நடப்பு 2023ம் ஆண்டில் உலகளவில் மக்கள் தொகை வளர்ச்சி, 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. அடுத்த ஆண்டில், உலகளவில் வினாடிக்கு 4.3 பிறப்புகளும், இரண்டு இறப்புகளும் நிகழும்.
அமெரிக்க மக்கள் தொகை வளர்ச்சியானது, நடப்பு ஆண்டில் 0.53 சதவீதமாக உள்ளது. இந்த ஓராண்டில், 17 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன. இதன் காரணமாக, அமெரிக்க மக்கள் தொகை 33.௬ கோடியை தாண்டியுள்ளது.
அடுத்த ஆண்டில் அமெரிக்காவில், 9 வினாடிகளுக்கு ஒரு குழந்தை பிறக்கும். 9.5 வினாடிகளுக்கு ஒரு இறப்பு நிகழும். இவை தவிர, 28.3 வினாடிகளுக்கு ஒரு வெளிநாட்டவர், அமெரிக்க மக்கள் தொகையில் சேர்வார்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்காவின் மக்கள் தொகை வளர்ச்சி சரிந்து வருவதாக, அந்நாட்டின் மக்கள் தொகை ஆய்வாளர் வில்லியம் பெரே கவலை தெரிவித்து உள்ளார்.
அவர் கூறுகையில், ”1930ம் ஆண்டுகளில், அமெரிக்காவில் ஏற்பட்ட பெரும் பொருளாதார மந்தநிலையின் போது, மக்கள் தொகை வளர்ச்சி 7.3 சதவீதமாக சரிந்தது.
”தற்போது, 2020 – 30 வரையிலான தசாப்தத்தில், அமெரிக்க மக்கள் தொகை வளர்ச்சி, 4 சதவீதத்திற்கும் கீழ் சரியலாம். இதற்கு கொரோனா தொற்று பரவல் முக்கிய காரணமாக இருக்கும்,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்