கீவ், உக்ரைன் மீது, 122 ஏவுகணைகள் வீசியும், ‘ட்ரோன்’ எனப்படும், ஆளில்லா சிறிய ரக விமானங்கள் வாயிலாகவும் ரஷ்யா நடத்திய தாக்குதலில், 13 பேர் உயிரிழந்தனர்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் மீது, 122 ஏவுகணைகள் வீசியும், 36 ட்ரோன்கள் வாயிலாகவும், ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட ஆறு நகரங்களில், நேற்று முன்தினம் காலையில் இருந்து இரவு வரை இந்த தாக்குதல் நடந்துள்ளது.
இதில், 13 பேர் உயிரிழந்தனர்; ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்தன. பலர் கட்டட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement