Indian-origin businessman commits suicide with his wife and daughter? | இந்திய வம்சாவளி தொழிலதிபர் மனைவி, மகளுடன் தற்கொலை?

நியூயார்க் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க தொழிலதிபர், தன் மனைவி, மகளுடன், பாஸ்டன் நகரில் உள்ள வீட்டில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் வசித்த இந்திய வம்சாவளி தொழிலதிபர் ராகேஷ் கமல், 57. இவரது மனைவி, டீனா, 54; மகள் ஏரியானா, 18.

சொகுசு பங்களா

ராகேஷும், அவரின் மனைவியும் இணைந்து ஆன்லைன் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர்; 40 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு பங்களாவிலும் வசித்தனர்.

இந்நிலையில், ராகேஷ் மற்றும் அவரது மனைவியை, சில நாட்களாக தொடர்புகொள்ள முடியாததால், அவரது உறவினர் நேற்று முன்தினம் டோவர் நகர போலீசுக்கு தகவல் தந்தார்.

போலீசார் சென்று பார்த்த போது, ராகேஷ், டீனா தம்பதியினரும், அவர்களது மகளும் சுடப்பட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது.

ராகேஷின் உடலுக்கு அருகே துப்பாக்கி கிடந்துள்ளது. மூவரது உடலையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார், ஆரம்ப கட்ட விசாரணையை துவக்கி உள்ளனர். மூவர் இறந்த சம்பவம் கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.

அதேநேரத்தில், ராகேஷ் மற்றும் டீனாவின் செல்போன், மடிக்கணினிகளை ஆராய்ந்ததில், அவர்கள் எஜுநோவா என்ற நிறுவனத்தை நடத்த முடியாமல், 2021ல் கைவிட்டது தெரிய வந்துள்ளது.

திவால் நோட்டீஸ்

மேலும், நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரியான டீனா, 80 கோடி ரூபாய் அளவுக்கு கடன் இருப்பதாக திவாலானவர்களாக அறிவித்ததோடு நோட்டீஸ் வழங்கி உள்ளார்.

கடன் நெருக்கடியால், இவர்கள் வசித்து வந்த, 40 கோடி ரூபாய் மதிப்பிலான வீடும் பறிமுதலுக்கு உள்ளாகியது. அதனால் ஏற்பட்ட பிரச்னையால், ராகேஷ், தன் மனைவி மற்றும் மகளை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என, நம்பப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.