யாத்கிர்,: பாலிஷ் போட்டு விற்பனை செய்வதற்காக, ஆலையில் பதுக்கப்பட்ட 700 குவின்டால் அரிசி, பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவான பா.ஜ., பிரமுகரின் தம்பியை போலீசார் தேடுகின்றனர்.
அன்னபாக்யா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் அரிசியை, பாலிஷ் போட்டு அதிக விலைக்கு விற்ற, ஐந்து பேர் கும்பலை, கடந்த சில நாட்களுக்கு முன்பு, யாத்கிர் சுர்பூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கலபுரகி சித்தாபூர் பா.ஜ., பிரமுகர் மணிகாந்தா ரத்தோடின் சகோதரர் ராஜு ரத்தோடின் அரிசி ஆலையில் வைத்து, ரேஷன் அரிசிக்கு பாலிஷ் போட்டது தெரிந்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம் குர்மித்கல்லில் உள்ள, ராஜு ரத்தோடின் அரிசி ஆலையில், சுர்பூர் டி.எஸ்.பி., ஜாவேத் இனாம்தார் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது 700 குவின்டால் அதாவது 70,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 630 குவின்டால் அரிசியை பாலிஷ் போட்டதும், மீதம் 70 குவின்டால் அரிசியை பாலிஷ் போட வைத்திருந்ததும் தெரிந்தது. தலைமறைவாக உள்ள ராஜு ரத்தோடை போலீசார் தேடுகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement