பந்தலுார்கேரள மாநிலத்தில் கண்ணனுார், வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டுள்ள நக்சல்களை கட்டுப்படுத்தும் பணியில், கேரள மாநில அதிரடி படையினர் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதில், நீலகிரி மாவட்டம் பந்தலுார் எல்லையோர பகுதிகளிலும் தமிழகத்தில் நக்சல் நுழையாதவாறு கண்காணிப்பு தொடர்கிறது.
இந்நிலையில், கடந்த நவ., மாதம், 13ம் தேதி, கண்ணனுார் பகுதியில் அதிரடிப்படையினர் மற்றும் நக்சல்கள் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.
அதில், ஒன்பது நக்சல்கள் தப்பி சென்றனர். அவர்கள் விட்டு சென்ற மூன்று துப்பாக்கிகளை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து அவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், நக்சல்கள் வெளியிட்ட தகவல் குறித்து, கேரள போலீசார் கூறுகையில்,’நக்சல் இயக்கத்தில் இருந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கவிதா, 44, என்பவர், கண்ணனுார் பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில் காயம் அடைந்தார்.
‘வனப்பகுதியில் சிகிச்சை எடுக்க முடியாத நிலையில் அவர் உயிரிழந்ததால், அவரை வனப்பகுதியில் அடக்கம் செய்தோம் என்ற தகவல் வெளியாகி உள்ளது’ என்றனர்.
இவர் மீது, கேரளா மாநிலத்தில் மட்டும், 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் மேற்கு தொடர்ச்சி மலையின் கபினி தளத்தின் நிர்வாகியாக செயல்பட்டு வந்தவர். இவரது கணவர் ராமு என்பவர், நக்சல் இயக்கத்தில் செயல்பட்டு வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் கண்ணனுாரில் போலீசாரிடம் சரணடைந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement