பெலகாவி,கர்நாடகாவில், வீட்டுத் தோட்டத்தில் இருந்த பூக்களை குழந்தை பறித்ததற்காக, குழந்தையின் தாயின் மூக்கை, வீட்டின் உரிமையாளர் அறுத்த சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடகாவின் பெலகாவி மாவட்டம், பசுரத்தே கிராமத்தைச் சேர்ந்தவர் சுகந்தா முரே, 50; அங்கன்வாடி பணியாளர்.
இவர் தன் குழந்தையுடன் வீட்டுக்கு சென்ற போது, வழியில் உள்ள ஒருவரது வீட்டின் தோட்டத்தில் இருந்த பூக்களை, சுகந்தாவின் குழந்தை பறித்தது.
இதை பார்த்த வீட்டின் உரிமையாளர் கல்யாண் முரே, குழந்தையை திட்டியுள்ளார்.
‘சாதாரண பூவை பறித்ததற்கு குழந்தையை திட்டுகிறீர்களே’ என சுகந்தா கேள்வி கேட்டதற்கு, அவரை திட்டியுள்ளார்.
இதனால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது. அப்போது ஆத்திரமடைந்த கல்யாண் முரே, வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வந்து, சுகந்தாவின் மூக்கை வெட்டினார்.
இதில், அவர் ரத்தம் வழிய அலறியபடி மயங்கி விழுந்தார். இதை பார்த்ததும், கல்யாண் முரே தப்பி ஓடி விட்டார்.
சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், சுகந்தாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவரது நிலை மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தப்பி ஓடிய கல்யாண் முரேயை போலீசார் தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement