Development of Modi administration: Special article published in Chinese daily | மோடி நிர்வாகத்தின் வளர்ச்சி : சீன நாளிதழில் சிறப்பு கட்டுரை வெளியீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பீய்ஜிங்: பிரதமர் மோடியின் நிர்வாகத்தின் கீழ் இந்திய பொருளாதாரம், வெளியுறவு கொள்கை ஆகிய துறைகள் வேகமாக வளர்ச்சி கண்டு வருவதாக சீன பத்திரிகை பாராட்டி கட்டுரை வெளியிட்டு உள்ளது.

இது தொடர்பாக சீனாவிலிருந்து வெளி வரும் ‛‛குளோபல் டைம்ஸ்” நாளிதழில் , புடான் பல்கலை.யின் தெற்காசிய ஆய்வு மையத்தின் இயக்குனர் ஜாங் ஜியாடோங், இந்தியாவை பற்றி நான் என்ன உணர்கிறேன் என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த நான்கு ஆண்டுகளில் பிரதமர் மோடியின் நிர்வாகத்தின் கீழ் இந்தியாவின் வலுவான பொருளாதார வளர்ச்சி, நகர்ப்புற நிர்வாகத்தில் முன்னேற்றம் , சர்வதேச உறவுகள், மற்றும் வெளியுறவு கொள்கை, குறிப்பாக சீனாவுடனான அணுகுமுறையில் மாற்றம் ஆகியவற்றில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டு வருகிறது.

உதாரணமாக, இந்தியா -சீனா இடையே வர்த்தக ஏற்றத்தாழ்வு விஷயத்தில் ஏற்றத்தாழ்வைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் சீனா கவனம் செலுத்தி இந்தியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. இவ்வாறு அந்த கட்டுரையில் தெரிவித்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.