வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலின் நுழைவு வாயிலின் முகப்பு பகுதியில் பெரும் மெகா சைஸ் கொண்ட சிலைகள் நிறுவப்பட உள்ளது. இதில் ஹனுமன், யானை, சிங்கம் , கருடபகவான், போன்ற அழகு சிலைகள் அலங்கரிக்க உள்ளது. இது தொடர்பான சில புகைப்படங்கள் ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா சார்பில் எக்ஸ் வலை தளத்தில் பகிரப்பட்டுள்ளது.

இந்த சிலைகள் கிரானைட், மார்பிளுக்கு பேர் போன ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கற்கள் கொண்டு வரப்பட்டு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. பிங்க் வண்ணத்தில் மிளிரும் இந்த சிலைகள் பார்ப்பவர்ளை பிரமிக்க வைக்கிறது.

இன்னும் இது போன்ற வண்ண சிற்ப ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகின்றன.
அயோத்தியில் கட்டப்பட்டு உள்ள ராமர்கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜன., 22ம் தேதி நடக்கிறது. கும்பாபிஷேகத்திற்கு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement