Plane Door Blows Out Mid-Air, Passengers Video Captures Horror | நடுவானில் திறந்த விமானத்தின் கதவு: பயணிகள் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடுவானில் பயணித்த விமானம் ஒன்றின் கதவு திடீரென திறந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். இதனையடுத்து விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

அமெரிக்காவின் போர்ட்லாண்ட் என்ற இடத்தில் இருந்து கலிபோர்னியாவின் ஆன்டரியோ நகரை நோக்கி 171 பயணிகள் மற்றும் 6 ஊழியர்களுடன் விமானம் ஒன்று கிளம்பியது. விமானம், 16,325 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்த போது, திடீரென அதன் கதவுகள் திறந்து கொண்டன. இதனால், பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். சிலர், இதனை வீடியோவாக பதிவு செய்தனர். உடனடியாக, விமானம் போர்ட்லாண்ட் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.