வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு: தமிழர் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி முதன்முறையாக இலங்கை திரிகோணமலை சம்பூரில் நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட காளைகளும், 150க்கும் மேற்பட்ட மாடுப்பீடி வீரர்களும் பங்கேற்றனர்.
கடந்தாண்டு திருச்சி வந்த போது இலங்கை கவர்னர் தொண்டைமான் இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில்,முதன்முறையாக இலங்கை திரிகோணமலை சம்பூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. போட்டியை இலங்கை கவர்னர் தொண்டைமான் மற்றும் மலேசியா எம்பி டத்தோ ஸ்ரீ முருகன் சரவணன் கொடியசைத்து துவக்கி வைத்தனர். மைதானத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை இலங்கை அமைச்சர்கள், எம்.பிக்கள்., மற்றும் தமிழத்தை சேர்ந்த் நடிகர் நந்தா உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
சுற்றுலா துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போட்டியில் 300க்கும் மேற்பட்ட காளைகள் 156 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதில் 50 வீரர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் களம் இறங்கினர். முதலாவதாக சம்பூர் மாரியம்மன் கோவில் காளை களத்தில் அவிழ்த்து விடப்பட்டது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை அடக்கும் வீரர்களுக்கு மின்விசிறி, ரைஸ் குக்கர் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. சிறந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் மாடுக்கு ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement