சென்னை: 2023ம் ஆண்டு டிசம்பர் முதல்வாரத்தில் சென்னையை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் வெள்ளம் காரணமாக, பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரண தொகையான ரூ.6000 இதுவரை 23.18 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக டிசம்பர் மாதம் முதல்வாரத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தது. குறிப்பாக சென்னையில் மழை நீர் […]
