வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்தியாவின் உயரிய ‘கேல் ரத்னா’ விருதை பாட்மின்டன் வீரர்கள் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டியும், கிரிக்கெட் வீரர் ஷமி, தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி உள்ளிட்டோர் அர்ஜுனா விருதையும் ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.
சர்வதேச விளையாட்டு அரங்கில் சாதிப்பவர்களுக்கு மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் தரப்படுகிறது. நாட்டின் உயரிய மேஜர் தயான்சந்த் ‘கேல் ரத்னா’ விருது பாட்மின்டன் இரட்டையர் பிரிவில் அசத்தி வரும் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டிக்கு அறிவிக்கப்பட்டது.
வைஷாலிக்கு அர்ஜுனா
இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி, அஜய் ரெட்டி (பார்வையற்றோர் கிரிக்கெட்), ஓஜாஸ் பிரவின், அதிதி கோபிசந்த் சுவாமி (வில்வித்தை), ஷீத்தல் தேவி (பாரா வில்வித்தை), பருல் சவுத்தரி (தடகளம்), முரளி ஸ்ரீசங்கர் (தடகளம்),
முகமது ஹுசாமுதீன் (குத்துச்சண்டை), திவ்யகிரித்தி சிங் (குதிரையேற்றம்), அனுஷ் அகர்வாலா (குதிரையேற்றம்), திக் ஷா தாகர் (கோல்ப்), கிருஷ்ணன் பகதுார் பதக் (ஹாக்கி), சுசிலா சானு (ஹாக்கி), பிங்கி (‘லான் பால்’), ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (துப்பாக்கி சுடுதல்), அன்டிம் பங்கல் (மல்யுத்தம்), ஆயிஹா முகர்ஜீ (டேபிள் டென்னிஸ்) ஆகியோருக்கும் அர்ஜூனா விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் இந்த விருதுகளை அவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement