MasterChef India – Tamil: ஓ.டி.டி-க்குத் தாவிய இரண்டாவது சீசன் – என்ன ஸ்பெஷல்?

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய ‘MasterChef India – Tamil’ நிகழ்ச்சியின் முதல் சீசன் சன் டிவியில் ஒளிபரப்பானது.

‘சமையல் ஒரு சீரியஸ் பிசினஸ்’ என்ற அவர்களின் டேக் லைனுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த சீசன் ஆரம்பத்தில் சற்று அந்நியப்பட்டு நின்றாலும், பிறகு கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. Chef ஆகும் கனவோடு இருக்கும் எளிய பின்புலத்தைக் கொண்டவர்களை இதில் பங்கேற்கச் செய்தது இந்நிகழ்ச்சிக்கு ஒரு ப்ளஸ் பாயிண்டாக அமைந்தது.

இந்நிலையில் இதன் இரண்டாவது சீசன் தற்போது தயாராகி ஒளிபரப்பாகவுள்ளது. இந்த சீசனில் விஜய் சேதுபதி தொகுப்பாளராக இடம்பெறமாட்டார் என்றே தெரிகிறது. முதல் சீசன் டிவியில் ஒளிபரப்பான நிலையில், அடுத்த சீசன் நேரடியாக ஓ.டி.டி-யில் (Sony LIV) ஒளிபரப்பாகவிருக்கிறது.

இதில் நடுவர்களாக செஃப் ராகேஷ் ரகுநாதன், செஃப் கௌஷிக் சங்கர், செஃப் ஸ்ரேயா அட்கா ஆகியோர் பங்கேற்கின்றனர். பிரீத்தி, ஆகாஷ், சங்கீதா, கவிதா, நந்தா உள்ளிட்ட சாமானிய மக்கள் பலர் போட்டியாளர்களாகப் பங்குபெறுகின்றனர். இந்த இரண்டாவது சீசன் வரும் 22-ம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது. இதன் அறிவிப்பு வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.