Modi congratulates Bhutan Prime Minister Sherif Dhopke on his victory | பூட்டான் பிரதமர் ஷெரிங் தோப்கே வெற்றிக்கு மோடி வாழ்த்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: பூட்டான் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் ஜனநாயக கட்சி பெரும்பான்மை பெற்றது. அக்கட்சி தலைவர் ஷெரிங் தோப்கே பிரதமராக பதவியேற்க உள்ளார்.

பூட்டான் பாராளுமன்றத்திற்கு மொத்த முள்ள 47 உறுப்பினர்கள் கொண்ட தேசிய சபைக்கு தேர்தல் நடந்தது. அன்றே வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் மக்கள் ஜனநாயக கட்சி 30 இடங்களில் வெற்றி பெற்றது. இக்கட்சியின் ஷெரிங்தோப்கே பிரதமராக பதவிறே்கிறார்.

இந்நிலையில் பிரதமராக பதவியேற்க உள்ள ஷெரிப் தோப்கேவிற்கு பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் தங்களின் வெற்றிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். இந்த வெற்றி மூலம் இரு தரப்பு நட்பு, ஒத்துழைப்பு மேலும் வலுப்படும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.