Ayodhya Ram temple to get 2,400kg bell from UPs Etah; largest in country, says maker | ராமர் கோயிலுக்கு 2,400 கிலோ எடையில் பிரமாண்ட மணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

அயோத்தி: உ.பி., மாநிலம் அயோத்தியில் ராமர் கோயிலுக்கு 2,400 கிலோ எடையில் கோயில் மணி தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

உ.பி.,யின் எடா மாவட்டத்தில் தயாரிக்கப்பட்ட இந்த மணியின் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும். தங்கம், வெள்ளி, தாமிரம், துத்தநாகம், ஈயம், தகரம், இரும்பு மற்றும் பாதரசம் ஆகிய உலோகங்களை கொண்டு 30 பணியாளர்கள் இந்த பிரமாண்ட மணியை தயாரித்து உள்ளனர். இந்த மணி, ரயில் மூலம் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிறகு அங்கிருந்து வாகனம் மூலம் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

நாட்டிலேயே மிகப்பெரிய மணி இதுவாகத்தான் இருக்கும் என அதனை தயாரித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.