வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஆமதாபாத்: ஆமதாபாத்தில் இருந்து அயோத்திக்கு இன்று (ஜன.,11) முதல் விமானம் கிளம்பியது. இதில், சில பயணிகள் ராமர், சீதை, அனுமன் வேடமணிந்து சென்றது ஆச்சரியப்படுத்தியது.
உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட அயோத்தி கோயில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. கோயிலை சிறப்பிக்கும் வகையிலும், சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கிலும் அயோத்தியில் புதிதாக விமான நிலையத்தை சமீபத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்த நிலையில் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து அயோத்திக்கு முதல் விமானம் இன்று (ஜன.,11) புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் சென்ற பயணிகள் ராமர், சீதை, லட்சுமணன், அனுமன் வேடம் அணிந்து சென்றுள்ளனர். இந்த காட்சி விமானத்தில் பயணித்தவர்களை ஆச்சரியப்படுத்தியது. மேலும் பயணிகள் விமான நிலையத்திற்கு வந்து விமான நிலைய ஊழியர்களுடன் இணைந்து முதல் விமானம் அயோத்திக்கு கிளம்ப இருப்பதை அடுத்து கேக் வெட்டி கொண்டாடினர். இது தொடர்பான புகைப்படம், வீடியோ வைரலாகியுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement