Ayodhya Ram Temple Kumbabhishekam: Prime Minister Modi Special Audio Release | அயோத்தி ராமர்கோயில் கும்பாபிஷேகம்; பிரதமர் மோடி சிறப்பு ஆடியோ வெளியீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

அயோத்தி: அயோத்தி ராமர்கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு பிரதமர் மோடி சிறப்பு ஆடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த ஆடியோ பதிவில் ‘ராம், ராம்’ என துவக்கி தொடர்ந்து அவர் பேசியதாவது: ”வரும் 22ம் தேதி நாட்டு மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இந்த புனித நிகழ்வில் நான் பங்கேற்பது பெரும் பாக்கியமாக கருதுகிறேன். இன்று முதல் 11 நாட்கள் விரதம் துவக்கி உள்ளேன். உணர்வுப்பூர்வமாக புதிய சக்தியை பெறுகிறேன். நான் ஒரு புத்துணர்ச்சியை உணர்கிறேன். இது போன்ற உணர்வை நான் அறிந்ததில்லை.

ராம பக்தர்கள் என்னை ஆசீர்வதிக்க வேண்டும். இது நாட்டு மக்களின் விழா, அனைவரையும் முன்னிலைப்படுத்த கடவுள் என்னை படைத்துள்ளார். சுவாமி விவேகானந்தர், சத்ரபதிசிவாஜி ஆகியோரை நினைவுகூர்கிறேன். ஆன்மிகம் , நமது கலாசாரத்தை உலக அளவில் புகழை பெற்றுதந்த விவேகானந்தரின் பிறந்த நாள் இன்று. அவரை நினைக்கும் போது ஒரு உத்வேகம் பிறக்கிறது. அவரது ஆற்றலும் , உற்சாகமும் இளைஞர்களுக்கு ஒரு தூண்டுகோலாக அமைகிறது. ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஸ்ரீ ராம்” என உரையை முடித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.