இன்று பொங்கலை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி உச்ச நட்சத்திரங்களின் படங்கள் திரையரங்களில் வெளியாகியுள்ளன.
அவ்வகையில் கடந்த 2018-ம் ஆண்டு ‘அயலான்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ஏலியன் பாத்திரத்தை அசலாகக் கொண்டு வர வேண்டும் என்கிற முனைப்பில் அதிகளவில் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு உழைப்பைக் கொடுத்து உருவாகியுள்ள ‘அயலான்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ‘இன்று, நேற்று, நாளை’ ரவிக்குமார் இயக்கியிருக்கிறார்.

இந்நிலையில் இன்று ரசிகர்களுடன் முதல் காட்சிப் பார்க்க திரையரங்கிற்கு வந்த நடிகர் சிவகார்த்திகேயன், “புது கன்டன்டை பார்வையாளர்களுக்குக் காட்டப்போறோம் என்ற சந்தோஷம் நிறைய இருக்கு. குடும்பத்துடன் வந்து பார்ப்பதற்கு ஏற்ற படமாக ‘அயலான்’ இருக்கும். சயின்ஸ் பிக்ஷன்-பேன்டஸி ஜானர் நம்ம ஊர்ல ரொம்ப ரொம்ப குறைவு. அந்த வகையில் இப்படம் உங்களுக்கு ஒரு நல்ல திரை விருந்தாக இருக்கும். நிறைய சிஜி காட்சிகள் இப்படத்தில் எடுத்துள்ளோம்.
‘ரஜினி முருகன் படத்திற்குப் பிறகு பொங்கலுக்கு வெளியாகும் என்னுடைய இரண்டாவது திரைப்படம் இது. இந்த படத்திற்கு ‘நம்பி வாங்க சந்தோஷம போங்க’. உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்” என்று மகிழ்ச்சியுடன் பேசினார்.
Every successful person has a painful story..
Every painful story has a successful ending..
Accept the pain and get
ready for SUCCESS!!!Here’s our #Ayalaan to the BIG SCREENS near you, Today
Enjoy this entertaining experience with your family & friends this Pongal… pic.twitter.com/7XZvLX7c6U
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) January 12, 2024
இது குறித்து ட்விட்டரிலும் பதிவிட்டுள்ள அவர், “வெற்றி பெற்ற எல்லோருக்குப் பின்னாலும் ஒரு வலி மிகுந்த கதை இருக்கிறது. ஒவ்வொரு வலி மிகுந்த கதையும் வெற்றியில்தான் முடிவடைகிறது. வலிகளை ஏற்றுக் கொண்டு வெற்றியை அடையுங்கள். இந்தப் பொங்கலுக்கு வெளியாகியுள்ள ‘அயலான்’ திரைப்படத்தை நண்பர்கள், குடும்பத்தினருடன் பார்த்துக் கொண்டாடுங்கள்” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.