வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சிகாகோ: அமெரிக்காவில் வீசிய புயல் காரணமாக, 2,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அமெரிக்காவின் சிகாகோ உள்ளிட்ட நகரங்களில், நேற்று முன்தினம் கடுமையான புயல் வீசியது.
சூறாவளி காற்று மட்டுமல்லாது இடி, மின்னலுடன் பலத்த மழையும் கொட்டியது; 75 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசியது.
இதனால், கிரேட் லேண்டு மற்றும் சிகாகோ தெற்கு பகுதியில் உள்ள ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. மின் வினியோகமும் துண்டிக்கப்பட்டதால், ஆயிரக்கணக்கானோர் இருளில் மூழ்கித் தவித்தனர்.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
மேலும், புயல் காரணமாக சிகாகோ விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களில் விமான சேவை பாதிக்கப்பட்டது. 2,400 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது; 2,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதன் காரணமாக, அமெரிக்காவில் உள்ள விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணியர் தவித்து வருகின்றனர். பல்வேறு நகரங்களில், 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement