நம் நாட்டில் பண மோசடியில் ஈடுபட்டு, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற குற்றவாளிகளை பிடிக்க, மத்திய விசாரணை அமைப்புகளின் அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழு, சம்பந்தப்பட்ட நாட்டுக்குச் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13,000 கோடி ரூபாய்க்கு கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல், ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனுக்கு தப்பிச் சென்றார்.
இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு, அவர் தற்போது லண்டனில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தொழிலதிபர் விஜய் மல்லையா, 9,000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்து லண்டனுக்கு தப்பிச் சென்றார்.
அவர் மீதான வழ
– புதுடில்லி நிருபர் – க்குகளின் விசாரணை, நம் நாட்டிலும், பிரிட்டனிலும் நடந்து வருகிறது.
இதே போல், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பில் ஈடுபட்ட, ஆயுத கடத்தல் வியாபாரி சஞ்சய் பண்டாரியும் லண்டனில் பதுங்கி உள்ளார்.
இந்த மூன்று பேரையும் நம் நாட்டுக்கு நாடு கடத்தும் பணியில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முழு வீச்சில் ஈடுபட்டு உள்ளது.
இந்நிலையில், பண மோசடியில் ஈடுபட்டு, பிரிட்டனில் உள்ள நிரவ் மோடி, விஜய் மல்லையா, சஞ்சய் பண்டாரி ஆகியோரை, நம் நாட்டுக்கு விரைவாக நாடு கடத்த, மத்திய விசாரணை அமைப்புகள் அடங்கிய சிறப்பு உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சி.பி.ஐ., – அமலாக்கத் துறை – தேசிய புலனாய்வு அமைப்பு போன்ற மத்திய விசாரணை அமைப்புகளின் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு உயர் மட்டக் குழு, விரைவில் பிரிட்டனுக்குச் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவர்கள் பிரிட்டன் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, குற்றவாளிகளை விரைவாக இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பாக கலந்தாலோசிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்