வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டெல் அவிவ்: காசாவில் உள்ள பாலஸ்தீனிய பல்கலை மீது இஸ்ரேல் விமானப்படையினர் வெடிகுண்டு வீசியதாக வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இது குறித்து தெளிவாக விளக்கம் அளிக்கும்படி அமெரிக்கா கூறியுள்ளது.
ஹமாஸ் பயங்கரவாதிகள் மீது இஸ்ரேல் போர் தொடுத்து 4 மாதங்களை கடந்து விட்டது. அவர்களின் மறைவிடங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படையினர் வெடிகுண்டுகளை வீசி வருகின்றனர்.
இந்நிலையில், காசாவில் உள்ள பாலஸ்தீனிய பல்கலை மீது இஸ்ரேலிய விமானப்படையினர் வெடிகுண்டு வீசியது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில், யாரும் இல்லாத பல்கலை மீது வெடிகுண்டு வீசியதும், இதனால் எழுந்த புகை மண்டலம் அனைத்து திசைகளிலும் பரவிய காட்சிகள் பதிவாகி உள்ளன.
இது குறித்து இதுவரை இஸ்ரேல் தரப்பில் இருந்து எந்த தகவலும் தரப்படவில்லை. அதேநேரத்தில், இது குறித்து தெளிவான விளக்கம் அளிக்கும்படி அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement