சென்னை: நடிகர் விஜயகாந்த் கடந்த ஆண்டு இறுதியில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவையொட்டி எராளமான நடிகர்கள், நடிகைகள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் இன்று மாலை விஜயகாந்தின் மறைவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதிலும் எராளமான நடிகர்கள், நடிகைகள் கலந்துக் கொண்டு, தங்களது அஞ்சலியை விஜயகாந்தின் படத்திற்கு செலுத்தினர்.