ஜெர்மனியில் விமான நிலைய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட அர்னால்டு

ஹாலிவுட்டின் பிரபலமான நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர்(76). அமெரிக்கா, கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் கவர்னரும் கூட. இவர் அமெரிக்காவிலிருந்து ஜெர்மனிக்கு சென்றுள்ளார். அங்குள்ள முனிச் விமான நிலையத்தில் சுங்க துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அர்னால்டு அணிந்து வந்த விலையுர்ந்த கைகடிகாரம் சுவிஸ் நிறுவனத்தால் பிரத்யேமாக தயாரிக்கப்பட்டு அர்னால்டுக்கு வழங்கப்பட்டது. இதன் மதிப்பு 22 ஆயிரம் யூரோக்கள். இந்த கைகடிகாரம் பற்றிய விரபங்களை அர்னால்டு தரப்பில் சுங்க ஆவணங்களில் குறிப்பிடவில்லை. இதனால் சுங்க அதிகாரிகள் அர்னால்ட்டிடம் இதுபற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இந்த கைகடிகாரத்தை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை தொண்டு நிறுவனத்திற்கு வழங்க உள்ளதாக அர்னால்டு தெரிவித்தார். ஆனால் அதை அதிகாரிகள் ஏற்கவில்லை. இதையடுத்து அபராதம் மற்றும் வரி ஆகியவற்றை சேர்த்து 35,000 யூரோக்கள் செலுத்த வேண்டும் என தெரிவித்தனர். அர்னால்டு தன்னிடம் கையில் பணம் இல்லை என்றும், ஆன்லைன் வாயிலாக செலுத்துவதாகவும் கூறி உள்ளார். ஆனால் அதிகாரிகள் பாதி தொகையை ரொக்கமாக தான் செலுத்த வேண்டும் என நிர்பந்தித்துள்ளனர். இதையடுத்து வங்கி ஏடிஎம் சென்று ரொக்க தொகையை எடுத்து வந்து அர்னால்டு செலுத்தினார். இதையடுத்து அவரை விமான நிலைய அதிகாரிகள் அனுமதித்தனர். இதனால் கிட்டத்தட்ட 3 மணிநேரம் விமான நிலையத்தில் அர்னால்டு தடுத்து நிறுத்தப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.