Kolar district has more women voters | கோலார் மாவட்டத்தில் பெண் வாக்காளர்கள் அதிகம்

கோலார் : கோலார் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.

கோலார் மாவட்ட வாக்காளர் பட்டியல், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதன்படி, கோலார், மாலுார், முல்பாகல், சீனிவாசப்பூர், தங்கவயல், பங்கார்பேட்டை ஆகிய ஆறு தொகுதிகளும், சிக்கபல்லாபூர் மாவட்டத்துக்கு உட்பட்ட சிந்தாமணி, சித்லகட்டா ஆகிய இரு தொகுதிகளும் உள்ளடங்கிய கோலார்— லோக்சபா தொகுதியில், மொத்தம் 17 லட்சத்து 8,065 வாக்காளர்கள்  உள்ளனர்.

இவர்களில் ஆண் வாக்காளர்கள் 6 லட்சத்து 32 ஆயிரத்து 681. பெண் வாக்காளர்கள் 6 லட்சத்து 45 ஆயிரத்து 338. மூன்றாம் பாலினத்தவர் 164. ஆண்களை விட  பெண்கள் 12 ஆயிரத்து 657 பேர் அதிகமாகியுள்ளனர்.

வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கும் பணியில் ஏற்கனவே பட்டியலில் இருந்தவர்களின் 19,595 பெயர்கள் நீக்கப்பட்டு, புதிதாக 28,349 பேரை சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.பாக்ஸ்…

****

8  தொகுதிகள் வாக்காளர் விபரம்:சித்லகட்டா  :        204231சிந்தாமணி:         226151சீனிவாசப்பூர்.     218419முல்பாகல்:            219923தங்கவயல்.          198672பங்கார்பேட்டை  207238கோலார்.               239674மாலூர்.                  193757மொத்தம் :            17, 08 065 

புல் அவுட்

—–

* ஓரிடத்தில் மட்டுமே ஓட்டுரிமை  புதிய வீட்டு முகவரியில் பெயரை சேர்க்கும் போது பழைய வீட்டின் முகவரியை நீக்கி இருக்க வேண்டும். இரு இடங்களில் ஓட்டுகள் இருப்பது தவறு. ஆதார் அடையாள அட்டையில் உள்ள முகவரியை தான் வாக்காளர் அடையாள அட்டையிலும் இருக்க வேண்டும். எனவே இரு இடங்களில் ஓட்டுரிமை இருப்பவர்களின் ஓட்டுகள் ரத்து செய்வதாக  தெரிகிறது. இது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.- – நடராஜன், 

கணேஷ் புரம், ராபர்ட்சன் பேட்டை.——-

* பிரசாரம் தேவை 

வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா இல்லையா என்று சரிபார்க்க  பொறுப்பான  அதிகாரிகள் பிரசாரம் செய்வதில்லை. கடந்த பொதுத் தேர்தலில் ஓட்டளித்ததால் இம்முறையும் வாக்காளர்  பட்டியலில் பெயர் இருக்கும் என்று நம்பி இருக்கிறோம்.

ஆனால்  ஏதோ ஒரு காரணம் காட்டி பெயரை இல்லாமல் செய்து விடுகின்றனர். பெங்களூரில் இடம் பெயர்ந்தாலும் ஓட்டுப் போடுவதே தங்கவயலில் தான். எனவே எங்கள் பகுதியில் உள்ள அங்கன்வாடிக்கு பெயர்கள் சரிபார்க்கும் பணியினை ஒப்படைக்க வேண்டும்.

– – மூர்த்தி,

நியூ மாடல் ஹவுஸ், கோரமண்டல்.

——–

* ஆதார் அட்டையே போதும்!  தேர்தல் நேரத்தில் மட்டுமே வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி வருகிறோம். ஆதார் அடையாள அட்டையில், பெயர், வயது, முகவரி எல்லாமும் இருப்பதால் தனியாக வாக்காளர் அடையாள அட்டை இருப்பது வேஸ்ட். 18 வயதுக்கு ஓட்டுரிமை  இருப்பதால், ஆதார் அடையாள அட்டையில் முழு விபரமும் கிடைத்து விடுகிறது. இடம் பெயரும் போதும் ஆதார் முகவரியை மாற்றிக் கொள்ளலாம்.- – ஸ்ரீ நிஷா, சாம்பியன் ரீப்

——* குடியிருப்பு பகுதியில் பிரசாரம் வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் இருக்கிறதா, என்பதை பார்க்க எப்போது, எங்கே போய் பார்க்க வேண்டும். இறந்தவர்கள் பெயர்கள் நீக்கப் படுவதில்லை. இடம் பெயர்ந்தவர்கள் பெயரும் நீக்கப் படுவதில்லை. புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனரா என்றும் தெரிவதில்லை. இதற்கான அறிவிப்பு குடியிருப்பு பகுதிகளில் தேவை.

— ஷர்மிளா பெமல் நகர்.

——-

* விழிப்பாக இருக்க வேண்டும்

கல்லுாரியில் வந்து ஓட்டுரிமைக்கு பெயர் சேர்க்க  முகாம் அமைத்தார்கள்.  அதில்  நானும்  பதிவு  செய்தேன். என்னைப் போல் பல மாணவர்களும் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டனர்.  எங்கள் குடும்பத்தில் எனது தாத்தா, தாத்தாவுக்கு தாத்தா  என ஐந்து தலைமுறை யினருக்கு ஓட்டுரிமை கிடைத்திருக்கு.  இதில்  தற்போது மூன்று தலைமுறையினர் இம்முறை ஓட்டளிக்க பட்டியலில் இருக்கிறோம். இதன் பேரில் எனது தந்தை மிகுந்த கவனமாக இருந்து வருகிறார். எனவே ஒவ்வொருவரும் விழிப்புடன் இருந்தால் தகராறு வராது.- – அவினேஷ்கென்னடிஸ். ——-

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.