டாடா டிகோர், டியாகோ ஆட்டோமேட்டிக் சிஎன்ஜி டீசர் வெளியீடு – Automobile Tamilan

இந்தியாவின் முதல் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்ற டிகோர் மற்றும் டியாகோ காரின் சிஎன்ஜி மாடலில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் உறுதிப்படுத்தும் வகையில் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே சந்தையில் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட டிகோர் ரூ.7.80 லட்சம் முதல் ரூ.8.95 லட்சம் வரையும், டியாகோ சிஎன்ஜி விலை ரூ. 6.55 லட்சம் முதல் ரூ. 8.10 லட்சம் வரை விற்பனையில் கிடைக்கின்றது.

Tata Tigor, Tiago AMT

சந்தையில் விற்பனையில் உள்ள டாடா டிகோர், டியாகோ இரு மாடல்களிலும் பொதுவாக 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர் என்ஜின் பெட்ரோலுடன் 86hp மற்றும் 113Nm டார்க், CNG உடன் வரும்பொழுது, 77hp மற்றும் 97Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இது 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டும் தற்பொழுது கிடைத்து வருகின்றது. கூடுதலாக வரவுள்ள ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் சிறப்பான நெரிசல் மிகுந்த நகரங்களுக்கு ஏற்றதாக விளங்கும்.

விற்பனையில் உள்ள டாப் வேரியண்டுகளான XT மற்றும் XZ+ என இரண்டிலும் கிடைக்க உள்ளது.

பிரீமியம் அப்ஹோல்ஸ்டரி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆட்டோ கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் 7.0 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்றதாக உள்ள காரில் ஐந்து இருக்கைகள் கொண்ட மாடலில் ஏர்பேக்குகள், ABS, ESC மற்றும் EBD ஆகியவை பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்கின்றன.

புதிய ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்ற iCNG மாடல்கள் விற்பனைக்கு அனேகமாக ஜனவரி மாத இறுதியில் எதிர்பார்க்கலாம்.

Follow us on Google News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.